பள்ளிவாசலுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் செய்த காரியம்

Report Print Sujitha Sri in சமூகம்

முல்லைதீவில் நேற்றைய தினம் பள்ளிவாசலொன்றில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் உண்டியலொன்றை தூக்கிச் சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

மஹ் சுப்ராணி பள்ளிவாசலிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, நள்ளிரவில் பள்ளிவாசலுக்குள் புகுந்த குறித்த நபர்கள் பள்ளிவாசலில் காணப்பட்ட உண்டியல் ஒன்றினை பணத்துடன் தூக்கி சென்றுள்ளதோடு, பள்ளிவாசலுக்குள் இருந்த யாத்திரிகர்களின் பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் முல்லைதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.