புலியாக இல்லை என்றாலும் குதறி எடுக்கும் நாயாக இருக்கின்றேன்: பிரபாகரன் குறித்து பாரதிராஜா நெகிழ்ச்சி

Report Print Shalini in சமூகம்

புத்தகங்களினூடாக நான் பார்த்த வீரமகன்தான் பிரபாகரன் என திரைப்பட இயக்குனர் பாரதிராஜா மீண்டும் தெரிவித்துள்ளார்.

ஈழம் 87 என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

“இந்த மண்ணுக்கான சரித்திரகால புருஷனை நான் என் கண்ணூடாக ஈழமண்ணில் பிரபாகரனாக பார்த்தேன்.” என புகழாரம் சூட்டினார்.

ஏழு நாட்கள் நான் வடக்கில் இருந்தேன், பிரபாகரனுடன் இருந்தேன், பெண் போராளிகளுடன் இருந்தேன். அவர்களுக்கு 3 நாள் பாடம் எடுத்தேன். அப்போது அவர்களுடைய செயலைக்கண்டு அதிர்ச்சியடைந்தேன் என குறிப்பிட்டார்.

எனினும் இந்திய துணைக்கண்டத்தை வரலாறு மன்னிக்காது. இன்னும் சற்று விட்டு இருந்தால் ஈழம் மலர்ந்திருக்கும். நான் நேரில் பார்த்தவன். அனைத்தையும் கெடுத்து விட்டார்கள் என கவலை வெளியிட்டார்.

பிரபாகரனை நான் காண சென்ற போது என்னை அவர் கட்டித்தழுவினார். என்னுடைய மண்வாசனை படத்தை பார்த்தேன் என குறிப்பிட்டு, எங்களுடைய வரலாற்றை எமது பிள்ளைகளைக் கொண்டு படமாக எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதற்கு நான் “என் பிள்ளைகளுக்கு பதில் திருமணம் முடித்து விட்டு வருகின்றேன்” என பதில் கூறினேன்.

தற்போது புகழேந்தி எழுதிய ஈழம் 87 புத்தகமே ஒரு ஆயுதம்தான். இந்த புத்தகத்தை பரப்புங்கள் அனைவருக்கும். அப்போதுதான் அனைவருக்கும் தெரியும் பிரபாகரன் என்றால் யார் என்று? என குறிப்பிட்டார்.

சுபாஸ் சந்திரபோஸ் இன்னொரு பிரபாகரன். பிரபாகரனுக்கு எப்பொழுது எல்லாம் மனம் துயில்கின்றதோ அப்போது எல்லாம் சுபாஸ் சந்திரபோஸ் அவர்களுடைய புத்தகத்தை படிப்பதாக குறிப்பிட்டார் என பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்து சென்ற அனைத்து இலங்கைத் தமிழர்களும் மிகவும் உயர்ந்த இடத்தில் இருக்கின்றார்கள் என பெறுமையாக கூறினார்.

தமிழன் என்ற ஒரு இனம் வலிமையான இனம் என்று உலகுக்கு சொன்னது பிரபாகரனுக்கு பின்னர் தான் எனவும் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

மேலும், வைகோவுக்கு ஐ.நாவில் சிங்களவர்களுடன் தர்க்கம் ஏற்பட்ட போது நான் யாழ்ப்பாணத்தில் இருந்தேன்.

இந்த நேரத்தில் என்னுடன் இருந்தவர்கள் என்னை பயமுறுத்தினார்கள். அப்போது நான் கூறினேன்.

“வைகோவைப்பாத்து வளர்ந்த எனக்கு அவருடைய தைரியம் கொஞ்சம் கூட இருக்காதா? என குறிப்பிட்டதுடன், வைகோ ஒரு புலி.. வைகோ ஒரு புலி.. நான் புலி இல்லை என்றாலும், குதறி எடுக்கும் நாயாக சரி இருந்து விடுகின்றேன்” என இறுதியாக கூறிவிட்டுச் சென்றார் பாரதிராஜா.