தமிழக மீனவர்கள் எட்டு பேர் கைது

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெத்தலகேணி பிரதேசத்தில் வடகிழக்கு கடற்பரப்பில் வைத்து அவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீன்பிடிக்காக அவர்கள் பயன்படுத்திய படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள், படகுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் உதவி கடற்றொழில் திணைக்களத்திடம் கையளிக்கப்பட உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Latest Offers