விபுலானந்தா கல்லூரியில் மாணவர்கள் கௌரவிப்பு

Report Print Theesan in சமூகம்

விபுலானந்தாக் கல்லூரியில் புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா பாடசாலை பிரதான மண்டபத்தில் இன்று பிற்பகல் 2.00மணியளவில் அதிபர் சு.அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமான நிகழ்வில் 2017ம் ஆண்டு நடைபெற்ற புலமைப் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் 169 மாணவர்களும், வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் 49 மாணவர்களும் பெறுபேற்றினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்ந்தனர்.

அந்த வகையில் அவர்களை கௌரவித்து நினைவுச்சின்னம், சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதுடன், மாணவர்கள் திறமைச்சித்திகளை பெற காரணமாகவிருந்த ஆசியர்களுக்கும் நினைவுச்சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக சிவசக்தி ஆனந்தன் , காதர் மஸ்தான் முதன்மை விருந்தினர்களாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் , வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் , வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் , ஸ்ரீ ரெலோ செயலாளர் நாயகம் ப.உதயராசா , முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில் நாதன் மயூரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கௌரவ விருந்தினராக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை செயலாளர் சுகந்தி கிஷோர் , முன்னாள் உப நகர பிதா சந்திரகுலசிங்கம் மோகன், நெல்சன் அறக்கட்டளையின் ஸ்தாபகர் நெல்சன் பெர்னாண்டோ, மூத்த ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் , வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் லம்போதரன், பாடசாலை பழைய மாணவர்கள், சமுக அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பெற்றோர்கள் ,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.