ஆறு பேர் பலி! அரசாங்கம் விடுத்த முக்கிய கோரிக்கை

Report Print Murali Murali in சமூகம்

ஓடை, நதி, நீர் வீழ்ச்சிகள் உள்ள இடங்களில் நீராடும் போது அந்த இடங்களில் பொருத்தப்பட்டுள்ள அறிவிப்புக்கள் தொடர்பில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டுமென்று அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் வசந்த பண்டார பலுகஸ்வௌ இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி, குறித்த ஆலோசனைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஏற்படும் அனர்த்தங்களைத் தவிர்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை லக்கல - அடென்வல பிரதேசத்தின் - தெல்கமுவ என்ற நதியில் நேற்று நீராடச் சென்ற போது எட்டு பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஆறு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நாத்தாண்டி பிரதேசத்தில் இருந்து வந்த 12 ஆண்களில் 8 பேர் இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போனோரை மீட்கும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.