பிரதேசசபை அதிகரிப்புக்கு மஸ்கெலியாவில் கொண்டாட்டம்!

Report Print Gokulan Gokulan in சமூகம்

நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்து மஸ்கெலியா நகரில் மகிழ்ச்சி கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகளுக்கு மேலதிகமாக நான்கு பிரதேச சபைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பழனி திகம்பரத்தின் இணைப்புச் செயலாளர் நகுலேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற கொண்டாட்டப் பேரணியில் மத்திய மாகாண சபை உறுப்பினர் சரஸ்வதி சிவகுரு உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

மஸ்கெலியா எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து பேரணியாக மஸ்கெலியா நகர மத்தியை சென்றடைந்தது.

இதன் போது பிரதேச சபைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் அமைச்சர்களான திகாம்பரம், இராதாகிருஸ்ணன் மற்றும் மனோ கணேசன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.