யாழ்ப்பாணம் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை! நால்வர் கைது

Report Print Murali Murali in சமூகம்

யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் பயணித்த பெண் ஒருவரிடம் இருந்து 15 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 27 தொடக்கம் 47 வயதுக்கு உட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பணம் சம்பாதிக்கும் நோக்கில் குறித்த நபர்கள் நீண்ட காலமாக இவ்வாறு கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு பேருந்தில் சென்ற பெண்ணின் கைப்பையை வெட்டி எடுத்துக் கொண்டு நகையுடன் கொள்ளையர்கள் தப்பிச் சென்றிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.