வெளிநாடு ஒன்றில் இலங்கை உள்ளிட்ட 34 பேர் திடீரென மதம் மாற்றம்!

Report Print Shalini in சமூகம்

இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஓமான் நாட்டில் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓமானில் உள்ள எண்டோவ்மெண்ட்ஸ் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சகத்தின் இஸ்லாமிய அடையாள மற்றும் கலாச்சார துறையின் தகவலின் படி 34 பேர் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 14 பெண்கள் மற்றும் 2 ஆண்கள், உகண்டா நாட்டைச் சேர்ந்த 6 பெண்கள், இலங்கையைச் சேர்ந்த 4 பெண்கள், சீனாவைச் சேர்ந்த 2 பெண்கள் மற்றும் ஒரு ஆண், இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண், மேலும் வேறு நாடுகளைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் இரு ஆண்கள் என மொத்தமாக 34 பேர் மதம் மாறியுள்ளனர்.

இஸ்லாமிய கலாச்சாரத்தை பரப்புவதில் இஸ்லாமியத் திணைக்களம் தொடர்ச்சியான பங்கை கொண்டுள்ளதுடன், இஸ்லாம் அல்லாதவர்களை இஸ்லாத்திற்குள் நுழைய விழிப்புணர்வுத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

முஸ்லிம் அல்லாதவர்களிடம் தெளிவான மற்றும் எளிமையான முறையில் இஸ்லாமியத்தின் செய்தியை வழங்குவதற்கு ஓமானில் உள்ள இஸ்லாமியத் திணைக்களம் பங்களிப்பை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.