நத்தார் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் ஒளிவிழா நிகழ்வு

Report Print Kari in சமூகம்

நத்தாரை முன்னிட்டு மட்டக்களப்பு - செங்கலடி மத்திய கல்லூரியில் ஒளிவிழா நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு கல்லூரி முதல்வர் குமாரசாமி அருணாசலம் தலைமையில் நேற்று கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, மதகுருமார்களின் ஒளிவிழாச் செய்திகள், கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்வுகள் ஆகியன மேடையேற்றப்பட்டுள்ளன.

அத்துடன், மணவர்கள் மத்தியில் இன நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் ஏறாவூர் ரஹூமானிய வித்தியாலய மாணவர்களும் கலந்து கொண்டு கலை நிகழ்வுகளை அரங்கேற்றியுள்ளனர்.

இந்த நிகழ்வில் மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு, கிழக்கு சபா சங்கச் செயலாளர் சிவநாயகம் சுகிர்தர், செங்கலடி புனித நிக்கொலஸ் தேவாலய அருட்தந்தை ஞானப்பிரகாசம் மகிமைதாஸ் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.