28 வருடங்களின் பின் சிக்கிய அரிய வகை மீன்!

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - மூதூர் கடற்பரப்பில் அரிய வகை இன மீனொன்று 28 வருடங்களின் பின் வலையில் சிக்கியுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த மீனவரொருவர் தெரிவித்துள்ளார்.

வேலா என்ற இனத்தைச் சேர்ந்த இந்த மீன் ஐந்தடி நீளத்தினையும், மூன்றடி அகலத்தினையும் கொண்டது. 190 கிலோ கிராமை கொண்ட வேலா மீன் அதிக பெறுமதியுடையது எனவும் மீனவர்கள் தெரிவிக்கின்றார்.

இரண்டு மீனவர்கள் நேற்று(11) மாலை சிறு தோணியில் கடலுக்கு சென்ற வேளையிலே இந்த அரிய வகை வேலா மீன் பிடிபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.