குடிபோதையில் ஹோட்டலில் பொலிஸார் செய்த அட்டகாசம்!

Report Print Vethu Vethu in சமூகம்

பாணந்துறையில் குடிபோதையில் அட்டகாசம் செய்த பொலிஸார் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

பாணந்துறை கடல் வீதியில் உள்ள ஹோட்டலுக்குள் பொலிஸ் அதிகாரிகள் இருவர் உட்பட மூவர் வன்முறை ஏற்படுத்தும் வகையில் நடந்துள்ளனர்

அவர்கள் நேற்று முன் தினம் இரவு குறித்த ஹோட்டலுக்கு சென்றுள்ள நிலையில், அங்கு மது அருந்தியுள்ளனர்.

மது அருந்திய பின்னர் குறித்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் ஹோட்டல் ஊழியரை அழைத்து பல்வேறு அழுத்தங்களை கொடுத்துள்ளனர்.

ஹோட்டலுக்கு வந்த மக்களையும், இசை வழங்கிய குழுவினரையும் பொலிஸார் அச்சுறுத்தி, அங்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.