மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய இளைஞருக்கு நேர்ந்த கதி

Report Print Steephen Steephen in சமூகம்

வீட்டில் தனிமையில் இருந்த 16 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிவிட்டு தப்பிச் செல்ல முயற்சித்த சந்தேகநபரை கிராம மக்கள் பிடித்து புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அந்த வகையில், புத்தளம் - பாலாவி பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான இளைஞரே கிராம மக்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மாணவி நேற்று மதியம் வீட்டில் தனிமையில் இருந்த போது அங்கு சென்ற சந்தேகநபர், அவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் நடந்த நேரத்தில் மாணவியின் தாயாரது சகோதரர் (மாணவியின் மாமன்) வீட்டுக்கு வந்துள்ளார். அவரை கண்ட சந்தேகநபர் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.

எனினும் மாணவியின் மாமனும், மக்களும் இணைந்து சந்தேகநபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்போது சந்தேகநபர் அதிகமாக மது அருந்தியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், பாலியல் வல்லுறவுக்கு உள்ளான மாணவி மருத்துவப் பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.