33 வயதிற்குள் இறந்து போகும் குடும்பத்தவர்கள்: உண்மை தெரியாமல் தவிக்கும் உறவினர்கள்

Report Print Steephen Steephen in சமூகம்

குருணாகல் - மெல்சிறிபுர, பன்லியத்த, ஹெவனதென்ன என்ற கிராமத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள் 30 முதல் 33 வயதுக்குள் உயிரிழக்கும் சம்பவம் இடம்பெற்று வருவதாக தெரியவருகிறது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு தலைமுறையினர் இல்வாறு 30 மற்றும் 33 வயதில் உயிரிழந்த சம்பவம் காரணமாக பிள்ளைகள் மற்றும் பேரப் பிள்ளைகள் செய்வதறியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்னர்.

இவ்வாறு தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மரணங்கள் ஏன் ஏற்படுகின்றது என்ற உண்மை தெரியாது எஞ்சியுள்ள குடும்ப உறுப்பினர்கள் தவிக்கின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அண்மையில் நடந்த வாகன விபத்தொன்றில் கணவனும், மனைவியும் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு மூன்று சிறிய பிள்ளைகள் உள்ளனர்.

குறித்த கிராமத்தில் இரண்டு சகோதரிகள் வசித்து வந்துள்ளதுடன் அவர்களுக்கும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். 32 மற்றும் 33 வயதான இவர்கள் திடீரென ஏற்பட்ட நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இவர்களின் கணவன்மாரும் 32 மற்றும் 33 வயதில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து இரண்டு குடும்பத்தின் பிள்ளைகளையும் உறவினர்கள் வளர்த்துள்ளனர். இந்த பிள்ளைகள் வளர்ந்த பின்னர் திருமணம் செய்துள்ளனர்.

இவர்களுக்கும் தலா மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், சகோதரர் ஒருவர் தனது 33ஆவது வயதில் திடீர் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். இதனால் அவரது மனைவி மூன்று பிள்ளைகளுடன் தனித்து போயுள்ளார்.

உயிரிழந்த நபரின் தங்கை தனது கணவருடன் பிள்ளைகளை பாடசாலையில் இருந்து அழைத்து வர சென்றுக்கொண்டிருந்த போது வாகன விபத்தில் இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் உயிரிழந்தன் காரணமாக இவர்களின் மூன்று பிள்ளைகள் உலகில் தனித்து வாழ நேரிட்டுள்ளது. இந்த குடும்பத்தில் இரண்டு மனைவிமார் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளனர். இவர்களுக்கும் 32 மற்றும் 33 வயதாகிறது. மேற்படி சம்பவங்கள் காரணமாக இவர்களும் கடும் மன அழுத்தங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களின் சகல சுக துக்கங்களுக்கும் மூத்த சகோதரும், சகோதரியும் மாத்திரமே உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமது குடும்பத்தினருக்கு ஏற்பட்டு வரும் இந்த துயர சம்பவங்கள் குறித்து கடும் அச்சத்தில் இருப்பதாக குடும்ப உறுப்பினரான ரோஷினி பிரதீபிகா என்ற பெண் தெரிவித்துள்ளார்.

தாம் சிறு வயதில் தமது பெற்றோரை இழந்தது போல் தமது பிள்ளைகளும் அதே வயதில் பெற்றோரை இழந்துள்ளமை மிகவும் கொடுமையான துயரம் எனவும் அவர் கூறியுள்ளார்.

அனாதரவான நிலையில் இருக்கும் பிள்ளைகளை வளர்த்து வரும் அதே கிராமத்தை சேர்ந்த இந்த குடும்பத்தின் உறவினரான சமந்திக்கா குமார என்பவர் இவ்வாறு கூறியுள்ளார்.

உண்மையில் என்ன நடக்கின்றது என்பது எமக்கு புரியவில்லை. நானும் எனது அண்ணனும் சிறு வயதில் இருந்தே துயரங்களை அனுபவித்து வருகின்றோம்.

இந்த துயரம் முடிந்தபாடில்லை. நாங்கள் இருவரும் தினமும் குழந்தை குட்டிகளும் செத்து, செத்து பிறக்கின்றோம். எனது இரண்டு சகோதரிகளின் பிள்ளைகளே இவ்வாறு அனாதரவாகியுள்ளனர்.

அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகளும் தற்போது அனாதரவாகியுள்ளனர். எனது சகோதரிகள் இருவரும் அவர்கள் திருமணம் செய்தவர்களுக்கு 33 வயது பூர்த்தியாகும் போது தமது பிள்ளைகளை விட்டு இறந்து விட்டனர்.

எனது அண்ணன் மிக சிரமப்பட்டு இந்த பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினார். அம்மா இறந்து விட்டார் என்ற குறையில்லாது பிள்ளைகளை வளர்த்தார். திருமணம் செய்து வைத்தார்.

இந்த ஆறு பிள்ளைகளுடன் எமது மூன்று பிள்ளைகளையும் சேர்த்து மொத்தம் 9 பிள்ளைகள். 32 மற்றும் 33 வயதில் எமது பெற்றோருக்கு நேர்ந்த நிலைமை ஏற்பட்டு வருகிறது.

ஒரு குடும்பத்தில் ஒரு சகோதரியின் மகள், அவரது கணவன் என இரண்டு பேரும் இறந்து விட்டனர். மூன்று பிள்ளைகள் அனாதைகளாகினர்.

இந்த மூன்று பிள்ளைகளையும் நானே வளர்த்து வருகின்றேன். அதே நேரத்தில் அக்காவின் மகன் திடீரென வாகன விபத்தில் உயிரிழந்தார்.

அவருக்கும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். மற்றைய சகோதரியின் மகள் திருமணம் செய்த கணவன் திடீரென் நோய் ஏற்பட்டு இறந்து போனார். அவருக்கும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். எதுவும் அறியாத பிள்ளைகள் அனாதைகளாக மாறியுள்ளனர்.

சகல பிள்ளைகளையும் எங்களால் முடிந்த வரை கவனித்து வருகின்றோம். இந்த சிறு பிள்ளைகளுக்கு யாராவது உதவி செய்யுங்கள் என நான் கோரிக்கை விடுகின்றேன். இது பெரிய உதவியாக இருக்கும்.

இருப்பதற்கு இடமில்லை. சாப்பிடுவதற்கும் எதுவுமில்லை. எம்மால் முடிந்தவரை பிள்ளைகளை பராமரித்து வருகின்றோம். இதனால் இந்த சிறிய பிள்ளைகளுக்கு வீடு ஒன்றை நிர்மாணித்து கொடுத்தாலும் அது பெரிய புண்ணியமாக இருக்கும் என சமந்திக்கா குமாரி கோரிக்கை விடுத்துள்ளார்.