திருமண வீட்டில் மைத்திரி, ரணில் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள்

Report Print Evlina in சமூகம்

ஐக்கிய தேசியக்கட்சியின் மாவத்தகமை தொகுதியின் அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.சி.அலவத்துவலவின் மகள் அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்துக்கொண்டார்.

கொழும்பு ஹில்டன் ஹொட்டலில் நடைபெற்ற இந்த திருமண வைபவத்தில் அரசியல் துறையில் முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து சிறப்பித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட பலரும் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பதிவு திருமணப் பத்திரத்தில் சாட்சியாளர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கையெழுத்திட்டுள்ளனர்.