இராணுவ ட்ரக் வண்டி விபத்து: 10 இராணுவத்தினர் படுகாயம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

கொத்மலை பொலிஸ் பிரவிற்குட்பட்ட கம்பளை, நுவரெலியா பிரதான வீதியில் இராணுவத்தினரின் ட்ரக் வண்டி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 10 இராணுவத்தினர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொத்மலை, பலாகொல்ல சந்தியில் இன்று நண்பகல் குறித்த ட்ரக் வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ். காங்கேசன்துறையில் இருந்து தியத்தலாவ இராணுவ முகாமிற்கு சென்ற இராணுவ ட்ரக் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை மீறி பிரதான வீதியின் கீழ் வீதியில் வீழ்ந்து குறித்த ட்ரக் வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது காயமுற்ற இராணுவ வீரர்கள் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுள் ஐவர் மேலதிக சிகிச்சைகளுக்கான கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விபத்தினால் அப்பகுதியுடனான போக்குவரத்து சுமார் 30 நிமிடங்கள் தடைப்பட்டதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.