தூக்கில் தொங்கிய நிலையில் 10 வயது சிறுமி சடலமாக மீட்பு! பொலிஸார் தீவிர விசாரணை

Report Print Murali Murali in சமூகம்

தூக்கில் தொங்கிய நிலையில் 10 வயது சிறுமி ஒருவரின் சடலம் பலாங்கொடை - ரன்தொலவத்த பகுதியில் இருந்து இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

பாதிமா சௌம்யா என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற போது வீட்டில் யாரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், வீடு திரும்பிய சிறுமியின் தாய், மகளை காணவில்லை என தேடிய போது, வீட்டின் பின்பகுதியில் சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

காணொளியை பார்வையிட