மாவீரர் துயிலுமில்லங்களுக்கு செல்ல தடை விதிக்கும் இராணுவத்தினர்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - விசுவமடு மாவீரர் துயிலுமில்லத்திற்கு செல்லவதற்கான அனுமதியை இராணுவத்தினர் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பதற்கு பொதுமக்கள் தயாராகி வருகின்ற இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலைளில், விசுவமடு மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் “அனுமதியின்றி உட்செல்லத்தடை” என்று எழுதப்பட்ட பதாதைகளை அந்தப் பகுதிகளில் காட்சிப்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த மாவட்டத்தில் 10 மாவீரர் துயிலுமில்லங்களில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் மாவீரர்களை நினைவு கூருவதற்கு பகிரங்கமாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருவதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.