ஆளில்லாமல் கரை ஒதுங்கிய இலங்கை படகு தொடர்பில் தீவிர விசாரணை

Report Print Ashik in சமூகம்

தனுஸ்கோடிக்கு அருகே, ஒத்ததாளை பகுதியில் ஆளில்லாத நிலையில் மீட்கப்பட்ட இலங்கை படகு தொடர்பில் பாதுகாப்பு துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆளில்லாமல் நேற்றைய தினம் கரையொதுங்கிய குறித்த படகை அவதானித்த ஒத்ததாளை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற மெரைன் பொலிஸார் இது தொடர்பில் சோதனை நடத்தியுள்ளனர். சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பைபர் படகு இலங்கையின் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான விசாரணைகளை கீயு பிரிவு மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றதுடன், கைபற்றப்பட்ட படகினை டிராக்டர் மூலம் மெரைன் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

மேலும், ஆளில்லாமல் கரை ஒதுங்கிய படகு குறித்து தனுஸ்கோடி பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தகக்து.