தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் - யுவதியின் சடலம் மீட்பு

Report Print Vethu Vethu in சமூகம்

களுத்துறையில் உயிரிழந்த நிலையில் இளைஞன் - யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை, மில்லனிய, பரகஸ்தொட்ட பிரதேசத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞன் மற்றும் யுவதியின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று இரவு 8.15 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 28 வயதான பொன்சேகா என்ற இளைஞரும், 19 வயதான மஹேஷிகா என்ற யுவதியுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் பாதுகாப்புடன் சம்பவ இடத்திலேயே சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.