யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் மாபெரும் பேரணி! ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிப்பு

Report Print Thamilin Tholan in சமூகம்

அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வழியுறுத்தியும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மாபெரும் பேரணி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பேரணி யாழ்.பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு யாழ். மாவட்ட செலயகம் வரை செல்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தமது வழக்குகளை வவுனியா நீதிமன்றத்திலிருந்து அநுராதபுரத்திற்கு மாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அநுராதபுரம் சிறைச்சாலையில் 3 தமிழ் அரசியல் கைதிகள் 30 நாட்களைக்கடந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

கடுமையான போராட்டம் மற்றும் பேச்சுவார்த்தைகளின் பின்னர் குறித்த மூவரும் தமது போராட்டத்தை இடைநிறுத்திக் கொண்டனர்.

இந்த இவர்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை வழியுறுத்தி இன்று மாபெரும் பேரணி ஒன்றை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளார்கள்.

பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டம் பேரணியாக சென்று நாவல் வீதியிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

தற்போது யாழ்.மாவட்ட செயலகத்தை நோக்கி செல்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து பேரணி யாழ். மாவட்ட செயலகம் வரை சென்றதுடன் ஜனாதிபதிக்கான தமது கோரிக்கை மகஜர் ஒன்றையும் மாணவர்கள் வடமாகண ஆளுநர் அலுவலகத்திலும் கையளித்துள்ளனர்.

புகைப்படங்கள் - சுதந்திரன்

காணொளி - சுமி, தமிழின் தோழன்