ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ள சீரடி சாயி மந்திர் பிரார்த்தனை மண்டபம்

Report Print Akkash in சமூகம்

கொழும்பு 13, இலங்கை சீரடி சாயி மந்திரின் பிரார்த்தனை மண்டபம் இம்மாதம் 16ஆம் திகதி மாலை 4.30 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கோலாகலமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

சீரடி சாயி பாபா மகா சமாதி அடைந்த 100ஆவது ஆண்டினை முன்னிட்டு குறித்த மண்டபம் திறந்து வைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அத்திவாரம் இடப்பட்டு, குறித்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.