வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பேரணி

Report Print Theesan in சமூகம்

264ஆவது நாளாகவும் இன்றைய தினம் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைதிப் பேரணியொன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த பேரணி இன்று மதியம் மேற்கொள்ளப்பட்டதுடன், இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள், கணவன்மார்களை மீட்பதற்கு ஐ.நாவில் குரல் கொடுக்கும் சர்வதேச நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு பேரணியில் கலந்து கொண்டவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகிய அமைதிப்பேரணி பசார் வீதியூடாக ஹொரவப்பொத்தானை வீதியினை வந்தடைந்து.

அத்துடன், ஹொரவப்பொத்தானை வீதியூடாக கண்டி வீதியினை வந்தடைந்து ஏ9 வீதியுடாக சுழற்சி முறையிலான உணவுதவிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்படும் இடத்தினை வந்தடைந்து பேரணியை நிறைவு செய்தனர்.