பௌதீகவளப் பற்றாக்குறையால் அசௌகரியத்தை எதிர்நோக்கும் பிலக் குடியிருப்பு மக்கள்

Report Print Mohan Mohan in சமூகம்

பௌதீகவளப் பற்றாக்குறையின் காரணமாக முல்லைத்தீவு, பிலக் குடியிருப்பு மக்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் காரணமாக, இடம்பெயர்ந்துச் சென்ற இந்த கிராம மக்கள் மீண்டும் 8 வருடங்களின் பின்னர் இப்பகுதியில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

எனினும் இதுவரையிலும் அடிப்படை வசதிகள் எதுவும் தமக்குப் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என அந்த மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நிரந்தர வீடுகளை இழந்த இந்த மக்கள் தற்போது தற்காலிக வீடுகளில் வசித்து வருகின்ற நிலையில், வடபகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை காரணமாக மேலும் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தமக்கான நிரந்தர வீடுகளை வழங்குவதற்கு உரிய அதிகாரிகள் கூடிய கவனம் எடுக்கவேண்டும் என குறித்த மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.