கடற்படையினரிடம் 500 கோடி ரூபா கோரி வழக்குத் தொடர்ந்த அவன் கார்ட் நிறுவனம்

Report Print Kamel Kamel in சமூகம்

இலங்கைக் கடற்படையினருக்கு எதிராக அவன் கார்ட் நிறுவனம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இன்றைய தினம்(14) அவன்ட் கார்ட் நிறுவனம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

கடற்படையினரிடம் 500 கோடி ரூபா கோரி இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச கடற்பரப்பில் பயணம் செய்யும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த தமது நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை கடற்படையினர் பலவந்தமாக கைப்பற்றிக் கொண்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.

இவ்வாறு தமது வர்த்தகத்தை கைப்பற்றிக் கொண்டதனால் ஏற்பட்ட நட்டத்திற்கு, கடற்படையினர் நட்டஈடு வழங்க வேண்டுமென கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இதேவேளை, கடற்படைத் தளபதி அட்மிரல் எஸ்.எஸ். ரணசிங்க, முன்னாள் கடற்படைத் தளபதி ட்ரவிஸ் சின்னையா, சட்ட மா அதிபர் உள்ளிட்ட சிலர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இயங்கி வந்த இந்த நிறுவனம், தற்போதைய அரசாங்க ஆட்சிக் காலத்தில் அவன் கார்ட் நிறுவனத்தின் நடவடிக்கைகள் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.