இராணுவத்திலிருந்து தம்மை சட்டரீதியாக விலக்குமாறு 8 ஆயிரம் சிப்பாய்கள் கோரிக்கை

Report Print Ajith Ajith in சமூகம்

இராணுவத்திலிருந்து தம்மை சட்டரீதியாக விலக்கிக்கொள்ளவதற்கு 8 ஆயிரத்து 52 இராணுவச் சிப்பாய்கள் கோரியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற இராணுவ சிப்பாய்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொதுமன்னிப்பு காலம் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த பொதுமன்னிப்பு காலம் நாளையுடன் நிறைவடைவுள்ளது. இந்த நிலையில், பொதுமன்னிப்பு காலம் நீடிக்கப்பட்டுள்ளது.