ஓட்டமாவடி புதிய செயலாளர் பதவியேற்பு

Report Print Navoj in சமூகம்

ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட எச்.எம்.எம்.ஹமீம் இன்றைய தினம்(14) தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

ஏறாவூர் நகரசபையின் செயலாளராக ஏழு வருடங்களும் ஐந்து மாதங்களும் கடமை புரிந்து வந்த எச்.எம்.எம்.ஹமீம்மின் சிறந்த நிர்வாக சேவை காரணமாக ஏறாவூர் நகர சபை தேசியத்தில் பல விருதுகளை தனதாக்கிக் கொண்டது.

எதிர் காலத்தில் இவரது வழிகாட்டலில் ஓட்டமாவடி பிரதேச சபையும் தேசியத்தில் பல விருதுகளை பெற்று தனது பெயரை மேலோங்கச் செய்யும் என்று பிரதேச மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதேவேளை, சிறந்த நிர்வாக சேவை அதிகாரியான எச்.எம்.எம்.ஹமீம் ஊடகவியலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.