தகவல் அறியும் உரிமை, மற்றும் அமுல்படுத்தல் தொடர்பில் தெளிவூட்டும் மாநாடு

Report Print Rusath in சமூகம்

தகவல் அறியும் உரிமை, மற்றும் அமுல்படுத்தல் தொடர்பில் பொதுமக்களைத் தெளிவூட்டும் மாநாடு மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாநாடு மட்டக்களப்பு கிறிஸ்த்தவ வாலிபர் சங்கத்தின் மாநாட்டு மண்டபத்தில் மாற்றுக் கொள்கைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றுள்ளது.

மாற்றுக் கொள்கை நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் லயனல் குருகேயின் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.ஜீ.புஞ்சிஹேவா கலந்து கொண்டு கருத்துக்களையும், விளக்கங்களையும் வழங்கியுள்ளார்.

இதன்போது தகவல் உரிமைகள் பற்றிய கையேடுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், இதில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் அமைப்புக்ளின் பிரதிநிதிகள், அரசசார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் அங்கத்தவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.