புனரமைப்புச் செய்யப்பட்ட கிண்ணியா வீதி திறந்து வைப்பு

Report Print Mubarak in சமூகம்

மீள்குடியேற்ற அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைக்கப்பட்ட திருகோணமலை, கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காக்காமுனை லெத்தீப் கிளாக் வீதி நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூபினால் குறித்த வீதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்ற அமைச்சின் 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இந்த வீதி புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.