குடும்பஸ்தரொருவர் தூக்கிட்டு தற்கொலை

Report Print Steephen Steephen in சமூகம்

அரநாயக்க - ஹபல்காவ கிராம சேவகர் பிரிவில், அத்ததெனிய பிரதேசத்தில் குடும்பஸ்தரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன் இதில், ஒரு பிள்ளையின் தந்தையான 45 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டில் சமையல் அறையில் கயிற்றை பயன்படுத்தி அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹங்குராங்கெத்த பிரதேசத்தை சேர்ந்த இந்த நபர் மனைவியின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

உயிரிழந்தவர் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிந்து வந்துள்ள நிலையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் பிரேதப் பரிசோதனைகள் இன்று மாலை நடைபெறவுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.