மாலை நேரங்களில் வவுனியா பொதுப் பூங்காவிற்கு செல்ல அச்சப்படும் மக்கள்

Report Print Theesan in சமூகம்

வவுனியா நகரசபை பொதுப் பூங்காவில் நுளம்புப் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில் மாலை நேரங்களில் அங்கு செல்வதற்கு அனைவரும் அச்சம் கொள்வதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,

வவுனியா நகரசபையின் பொதுப் பூங்காவினைச் சுற்றிய பகுதியில் நுளம்பு பெருக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. பூங்காவினை பொறுப்பெடுத்தவர்கள் நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதில்லை.

இதன் காரணமாகவே அந்தப் பகுதியில் நுளம்பு பெருக்கெடுக்கின்றது. இதனால் மாலை 6 மணியளவில் பூங்காவினைப் பூட்ட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

மாலை நேரங்களில் சிறுவர்கள், பெற்றோர்கள் பொழுதைக் களிப்பதற்காக அங்கு செல்வதுண்டு. தற்போது அங்கு செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.

தற்போது கடந்த சில வாரங்களாக பெய்துவரும் பருவப்பெயர்ச்சி மழை காரணமாக நுளம்பு பெருக்கம் மேலும் அதிகரித்து காணப்படுகின்றது. குறிப்பாக மாலை நேரங்களிலும் காலை வேளைகளிலும் நுளம்பின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.

இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் டெங்கு நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது என சுட்டிக்காட்டியுள்ளனர்.