போலி அமெரிக்க டொலர்களை வைத்திருந்த ஒருவர் கைது

Report Print Ajith Ajith in சமூகம்

பத்து இலட்சம் ரூபா பெறுமதியான போலியான அமெரிக்க டொலர்களை வைத்திருந்ததாக கூறப்படும் ஒருவரை சிறப்பு அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபர் கிண்ணியா, மாஞ்சோலைச்சேனை என்ற இடத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் போலி அமெரிக்க டொலர் நாணயத்தை விற்பனை செய்ய தயாராகி வருவதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் இந்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியா மற்றும் திருகோணமலையில் இருந்து சென்ற அதிரடிப்படையினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், டொலர் நாணயம் சட்ட ரீதியானது என அமெரிக்காவினால் பரிந்துரைக்கப்பட்ட போலி சான்றிதழ் ஒன்றையும் சந்தேகநபரிடம் மீட்டுள்ளனர்.

நினைவுச் சின்னமாகவே அமெரிக்கா மில்லியன் டொலர் நாணயத்தாள்களை வெளியிடுவதாகவும், அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கொழும்பிலும், திருகோணமலையிலும் சிலர் கைதுசெய்யப்பட்டமையின் தொடர்ச்சியாகவே கிண்ணியாவில் உள்ளவரும் கைதுசெய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்கள்: ஸ்டிபன்