கிந்தோட்டைக் கலவரத்தில் பொலிஸாரும் தவறிழைத்துள்ளனர்! பூஜித் ஜயசுந்தர

Report Print Aasim in சமூகம்

கிந்தோட்டையில் நடைபெற்ற இனக்கலவரத்தைத் தடுக்கும் செயற்பாட்டில் பொலிஸார் தவறிழைத்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

காலி, கிந்தோட்டை இனவன்முறையினால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நேற்றைய தினம் காலிமாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றிருந்தது.

மும்மதப் பெரியார்கள் மற்றும் கலவரம் நடைபெற்ற பிரதேசத்தின் பொதுமக்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கருத்து வௌியிட்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, கிந்தோட்டை இன வன்முறைகளை மிக இலகுவாக பொலிஸாரினால் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

அவ்வாறின்றி பொலிஸார் அசட்டையீனமாக நடந்து கொண்டு இனக்கலவரம் ஒன்றுக்கு வழி செய்ததன் மூலம் இலங்கை சர்வதேசத்தில் கரும்புள்ளியொன்றை சம்பாதித்துக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.