நீர் தேங்குவதால் நுளம்பு பெருகும் சாத்தியம்: மக்கள் கவலை

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்கு முன்னாலும், எருவில் சந்தியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பு நிலையத்திற்கு அருகிலும் நீர் தேங்கி அப்பகுதி அழுக்கடைந்துள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்துடன், மழை நீர் தேக்கியிருப்பதன் காரணமாக நுளம்புகளின் பெருக்கம் அதிலும் குறிப்பாக டெங்கு நுளம்புகள் அதிரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

பேருந்து தரிப்பு நிலையம் பயன்படுத்த முடியாத வகையில் மிகவும் அழுக்கடைந்து மழைநீர் தேங்கியுள்ளது. தற்போது மழை காலம் அரம்பித்துள்ள நிலையில் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

பிரதேசம் முழுக்க டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்துபவர்களின் கண்களில் இந்த பேருந்து தரிப்பு நிலையம் ஏன் தென்படவில்லை.

நாளாந்தம் இந்த பேருந்து தரிப்பு நிலையத்தை நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு தேவை நிமித்தம் பயன்படுத்தி வருகின்றார்கள். எருவில் கிராம மக்கள் பயன்படுத்தும் பிரதான பேருந்து தரிப்பு நிலையமாகவும் இது காணப்படுகின்றது.

எனவே இந்த பேருந்து தரிப்பு நிலையத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்படுத்தக் கூடியவாறு சுத்தமாகவும், நீர் தேங்கி நிற்காதவாறும் புனரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.