தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மீது குற்றச்சாட்டு

Report Print Mohan Mohan in சமூகம்

இராணுவத்தினரின் வசமுள்ள மாவீரர் துயிலுமில்லங்களை மீட்டு தருவதில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் அக்கறை செலுத்தவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான மாவீரர் துயிலுமில்லங்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அங்கு சென்று விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை, துணுக்காய், மணலாறு புனிதபூமி, மணலாறு உதயபீடம், அளம்பில், களிக்காடு உள்ளிட்ட மாவீரர் துயிலுமில்லங்களில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.

அத்துடன், இறுதி யுத்தத்தின் போது வீரமரணமடைந்த மாவீரர்களை அடக்கம் செய்த தேவிபுரம், சுதந்திரபுரம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட மாவீரர் துயிலுமில்லங்களும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்த சந்தர்ப்பத்தில் குறித்த துயிலுமில்லங்கள் இராணுவ ஆக்கிரமிப்பில் இருப்பதை மத்திய அரசிற்கு மக்கள் பிரதிநிதிகள் எடுத்து கூறவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.