பொன்சேகா மற்றும் கோத்தாவை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் 10 பேர் சிறையில்

Report Print Shalini in சமூகம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 10 பேர் தீவிரமான குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என நீதி மற்றும் புத்தசாசன பிரதி அமைச்சர் சாரதி துஸ்மந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டுள்ளார். “அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்” என சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த சாரதி துஸ்மந்த,

“பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 பேர் மட்டும் தீவிரமான குற்றச்செயல்களுடன் தொடர்புடைய வழக்குகளில் சந்தேகநபர்களாக உள்ளனர்.

இவர்கள் அனைவரும் தீவிரவாத செயல்களுடன் தொடர்புடைய மோசமான குற்றங்களில் ஈடுபட்ட சந்தேகநபர்கள்.

மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா கொலை, சரத் பொன்சேகா மீதான கொலை முயற்சி, கோத்தபாய ராஜபக்ஸ கொலை முயற்சி, வில்பத்து சரணாலயத்தில் 7 படையினர் கொலை, அனுராதபுர விமானப்படைத் தளத் தாக்குதல், போன்றவற்றில் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதில் உள்ளடங்கியுள்ளனர்.” என்று சாரதி துஸ்மந்த தெரிவித்துள்ளார்.