வவுனியாவில் கடையடைப்பு இல்லை

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் நாளைய தினம் கடையடைப்பு இடம்பெறவுள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் ரி. கே.இராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிவித்தலில்,

வவுனியாவில் கடையடைப்பு என சிலர் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். எனவே கடை அடைப்பு எமது அனுமதி அறிவித்தல் இன்றி இடம்பெறாது.

வர்த்தக நிலையங்களை திறந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம், வவுனியாவில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே இருந்துவரும் ஒற்றுமையை சீர் குலைக்க சிலர் முயன்று வருகின்றனர்.

நேற்று இடம்பெற்ற தீவிபத்து தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே மக்களிடையே ஒரு வதந்தியை உருவாக்கி வவுனியாவில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்த சிலர் முயன்று வருகின்றனர்.

எனவே அவர்களுக்கு எதிராக பொலிசார் சட்ட நடவடிக்கை மேற்கொள்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.