வவுனியாவில் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த விவசாயிகளுக்கான கௌரவமளிப்பு விழா, வவுனியா முருகனூர் விவசாய பண்ணையில் வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் த.யோகேஸ்வரன் தலைமையில் இன்று நடைபெற்ற குறித்த நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநோசன் கலந்து கொண்டிருந்தார்.
இதன் போது 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த விவசாயிகளுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டதுடன், சிறந்த வீட்டுத்தோட்டச் செய்கையாளர்களுக்குமான சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருந்தன.
அத்தோடு வீட்டுத்தோட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் பயன்தரு பழ மரக்கன்றுகளும் விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் விவசாய போதனாசிரியர்கள், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.