மட்டக்களப்பு மக்களின் நலன் கருதி குறுந்தகவல் சேவை

Report Print Rusath in சமூகம்

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் அலுவலகம் வாடிக்கையாளர்களின் நலன் கருதி குறுந்தகவல் சேவை ஒன்றினை வழங்கி வருகின்றது.

இது தொடர்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் டி.ஏ.பிரகாஷ மேலும் கூறுகையில்,

மட்டக்களப்பு பிராந்தியத்தில் நீர்த்துண்டிப்பு, நீர் கட்டண விபரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட இதர தகவல்களை கையடக்க தொலைபேசி மூலம் உடனுக்குடன் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

இதனால் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் பராமரிப்பு மற்றும் திருத்த வேலை காரணமாக ஏற்படும் நீர் தடை தொடர்பிலான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த சேவையினை உங்களின் கையடக்க தொலைபேசியில் செயற்படுத்துவதற்கு F இடைவெளி @battiwater என டைப் செய்து 40404 என்னும் இலக்கத்திற்கு sms செய்யவும் (உதாரணம்:- F @battiwater send to 40404)

மேலும் இந்த தகவலினை ஏனையவர்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களும் இச்சேவையின் பயனை பெற்றுக்கொள்ள உதவ வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers