கார்த்திகை மாதத்தை மரநடுகை மாதமாக நீடிப்பதில் உடன்பாடில்லை: சிவனேசன்

Report Print Thileepan Thileepan in சமூகம்

கார்த்திகை மாதத்தை மரநடுகை மாதமாக நீடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை என வட மாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, முருகனூர் விவசாய பண்ணையில் விவசாயிகளுக்கான சான்றிதழ் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வன்னிப் பிரதேசத்தில் விவசாய நடவடிக்கையில் அழிவுகளை ஏற்படுத்தும் ஒரு விலங்காக குரங்கு காணப்படுகின்றது. குரங்கை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கின்றது.

குரங்குகள் வீட்டுத் தோட்டத்தை துவம்சம் செய்து விட்டு போகின்றன. இது பாரிய பிரச்சினையாகவும், சவாலாகவும் இருகிறது. இதனால் வருகின்ற ஆண்டு எனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் குரங்குகளை ஒழிப்பதற்கு என்று ஒரு குறிப்பிட்ட நிதியை ஒதுக்கி வைத்துள்ளோம்.

ஆனால், அதனை எவ்வாறு ஒழிப்பது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. யானைகளின் அச்சுறுத்தலும் இருக்கின்றது. காடுகளை சுற்றி மரங்கள் இருக்கின்ற போதும் காடுகளின் உட்பகுதியில் மரங்கள் இல்லை. இதனால் உணவுக்காக யானைகள் மக்கள் குடிமனைகளை நோக்கி வருகின்றது.

வடக்கு மாகாண சபையால் தனித்து அதனை கட்டுப்படுத்த முடியாது. மத்திய அரசுடன் இணைந்து தான் நாம் கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.