தாந்தாமலையில் சோளன் அறுவடை

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு - தாந்தாமலைக் கிராமத்தில் சோளன் பயிர் அறுவடை செய்யப்பட்டுள்ளதுடன், சோளத்தில் பெறுமதிசேர் தொழில் நுட்பங்களையும், செய்முறையில் விபரிக்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு தாந்தாமலைப் பிரதேச விவசாயப் போதனாசிரியர் பொ.சிறிபவனின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றுள்ளது.

மேலும், நிகழ்வில் மட்டக்களப்பு பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன், மட்டக்களப்பு தெற்கு வலய உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.சிவஞாம், மற்றும் விவசாயிகள், விவசாயப் போதனாசிரியர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.