பனைமர கள் இறக்குவற்கான தடை நீக்கப்படும்: ஜனாதிபதி உறுதி

Report Print Gokulan Gokulan in சமூகம்

பனை மரத்திலிருந்து 'கள்' இறக்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு அண்மையில் வெளியாகியிருந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தி, பனை மரத்திலிருந்து 'கள்' இறங்குவதற்கு வசதியாக அமைச்சரவையில் தீர்மானம் எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று இரவு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட ஈழமக்கள் ஜனநாயகக் கடசியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, 'கள்' இறக்குவதற்கு தடை ஏற்பட்டுள்ளதாக வெளியான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

அத்துடன் இவ்விடயத்திற்கு உடனடியான தீர்வு வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்தே ஜனாதிபதி மேற்கண்டவாறு உறுதியளித்தார்.

'கள்' இறக்குவதற்கு தடை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து குறிப்பாக வடமாகாணத்தில் சுமார் 12 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதையும், பனைசார் உற்பத்தி முயற்சிகள் பாதிக்கப்பட்டிருப்பதையும் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியிருந்தார்.

இவ்விடயம் தொடர்பாக ஏற்கனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுனும், நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களுடனும் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடி உள்ளார்.