நகரசபை மக்களை பிரதேசசபைக்கு மாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

தலவாக்கலை நகரசபையிலிருந்து நுவரெலியா பிரதேசசபையான கொட்டகலை பிரதேசசபைக்கு மாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

குறித்த போராட்டம் இன்று மாலை குமாரகம பகுதியில் அமைந்துள்ள ஹொலிரூட் கிராம சேவகர் அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக மேலதிகமாக மூன்று பிரதேசசபைகள் அதிகரிப்பட்டு அண்மையில் வர்த்தமானியும் வெளியிடப்பட்டன.

இந்த வர்த்தமானிக்கமைய குமாரகம, தெவிசிரிபுர, ரத்னிலகல ஆகிய கிராமங்கள் தலவாக்கலை நகரசபையிலிருந்து மாற்றம் பெற்று கொட்டகலையில் அமையவுள்ள பிரதேசசபைக்கு மாற்றம் பெற்றுள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

நகரசபை ஊடாக கிடைக்கின்ற சலுகைகள் இல்லாது போவதாகவும், தங்களுடைய அன்றாட தேவைகள் கூட, குப்பை அகற்றல் காணி தொடர்பான விடயங்கள் உட்பட ஆவணங்களை பெற கொட்டகலைக்கு பிரதேசசபைக்கு செல்ல வேண்டியிருப்பதாகவும் இதனால் தமக்குள்ள அசையாசொத்துக்களின் பெறுமதி குறைவதாகவும், இதற்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்காலத்தில் தாங்கள் வழக்கு தாக்கல் செய்யப்போவதாகவும் தெரிவிக்கின்றனர்.