யாழ். நீர்வேலி செல்லக்கதிர்காம ஆலய முன்பள்ளிக் கட்டட புனரமைப்புக்கு நிதியுதவி

Report Print Thamilin Tholan in சமூகம்

யாழ். நீர்வேலி செல்லக்கதிர்காம ஆலய முன்பள்ளிக் கட்டடப் புனரமைப்புக்காக வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் 75,000/= ரூபா நிதியுதவியை இன்று(21) வழங்கி வைத்துள்ளார்.

தனது 2017ஆம் ஆண்டுக்கான மாகாணசபை நிதியொதுக்கீட்டின் கீழ் மேற்படி ஆலய முன்பள்ளியின் புனரமைப்புக்கான நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினருடன், ஆலயப் பிரதமகுரு மற்றும் ஆலய நிர்வாகிகள், பிரதேச மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.