இந்திய மீனவர்களை விரட்டியடித்த கடற்படையினர்

Report Print Ajith Ajith in சமூகம்
67Shares

இலங்கை கடற்படையினரால் சுமார் 1700 இந்திய மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டதாக தமிழக மீனவர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த குற்றச்சாட்டை இன்றைய தினம்(21) மீனவ சங்க தலைவர் பி.ஜேசுராஜா சுமத்தியுள்ளார்.

குறித்த சம்பவம், கச்சத்தீவுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

இதன்காரணமாக, 75 படகுகளில் சென்ற மீனவர்கள் தொழிலில் ஈடுபடாமல் திரும்பிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் 53 தமிழக மீனவர்கள் இலங்கையின் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப் பட்டுள்ளதாகவும் மீனவ சங்க தலைவர் பி.ஜேசுராஜா குறிப்பிட்டுள்ளார்.