யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டத்தில் சில பகுதிகளில் மின்தடை

Report Print Thamilin Tholan in சமூகம்

வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காகவே நாளை புதன்கிழமை(22) மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பிரகாரம், நாளை காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரை யாழ்.மாவட்டத்தில் மருதங்கேணி, வத்திராயன், உடுத்துறை, கொடுக்குழாய், ஆழியவளை, வெற்றிலைக்கேணி, வெற்றிலைக்கேணி இராணுவ முகாம்,கட்டைக்காடு, கேவில், கட்டைக்காடு இராணுவ முகாம் ஆகிய பகுதிகளிலும்,

வவுனியா மாவட்டத்தில், காலை 08 மணி முதல் மாலை 05.30 மணி வரை தவசிக் குளம் கிராமம், அட்டம்பஸ்கட கிராமம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.