கட்டுநாயக்க விமான நிலையத்தில் கழிப்பறைகள் மூடல்! நீண்ட வரிசையில் காத்திருந்த பயணிகள்

Report Print Murali Murali in சமூகம்

பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் கழிப்பறைகள் சில இன்று மூடப்பட்டிருந்தன.

இதன் காரணமாக கழிப்பறையை பயன்படுத்துவதற்கு பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்திருந்தனர். இவ்வாறு கழிப்பறைகள் மூடப்படுவதால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடுவதாக பயணிகள் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும், கழிப்பறையை பயன்படுத்துவதற்கு வரிசையில் காத்திருந்தவர்களில் பெண்கள் மற்றும் வயதானவர்களும் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.