குழியில் விழுந்து மூன்று நாட்களாக உயிருக்கு போராடிய யானை

Report Print Ashik in சமூகம்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட சன்னார் கிராம பகுதியில் பாரிய குழி ஒன்றினுள் விழுந்து மூன்று நாட்களாக உயிருக்கு போராடிய யானையொன்றை நேற்று மாலை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

சன்னார் கிராமத்தில் வயலுக்குச் செல்லும் வீதிக்கு அருகில் காணப்பட்ட குழி ஒன்றினுள் கடந்த புதன்கிழமை யானை ஒன்று விழுந்துள்ளது. எனினும் குறித்த யானை குழியில் இருந்து வெளியில் வர முடியாத நிலை காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த யானையை காப்பாற்றும் வகையில் பிரதேச மக்கள் மேற்கொண்ட முயற்சியும் பயனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், குறித்த திணைக்கள அதிகாரிகள் நேற்று மாலை அந்த பகுதிக்கு வந்து யானையை மீட்டு காட்டுப் பகுதிக்குள் அனுப்பி வைத்துள்ளனர்.

Latest Offers