இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த ரொட்டரி கழக அங்கத்தவர்கள்

Report Print Mubarak in சமூகம்

இந்தியா - சேலம் நகரில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த ரொட்டரி கழக அங்கத்தவர்கள் திருகோணமலையில் உள்ள ரொட்டரி கழக அங்கத்தவர்களை சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பு நேற்று ரொட்டரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, தமது விஜயத்தின் எதிர்பார்ப்புகளை விளக்கியுள்ளனர்.

சந்திப்பில், கண் அறுவை சிகிச்சை செய்தல் மற்றும் கூட்டு திட்டங்களை செய்வதற்கான வாய்ப்புகளை ஆராய்தல், இரு கழகங்களும் இணைந்து கூட்டு திட்டங்கள் செய்வதற்கான வாய்ப்புகளை ஆராய்தலுக்கான உறுதிகள் வழங்கப்பட்டன.

மேலும், இரு கழகங்களும் தங்களது கழக கொடிகளை பகிர்ந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.