மாவட்ட கலை இலக்கியப் பெருவிழா: அழைப்பு விடுக்கப்படவில்லை என ஊடகவியலாளர்கள் விசனம்

Report Print Ashik in சமூகம்

மன்னார் மாவட்ட கலை இலக்கியப் பெருவிழாவிற்கு மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் கருத்த தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்ட கலை இலக்கியப் பெருவிழா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் மன்னார் நகர மண்டபத்தில் இன்று மாலை 2 மணியளவில் இடம்பெறவுள்ளது.

அத்துடன், மன்னார் மாவட்டச் செயலகமும், மாவட்ட கலாச்சார பேரவையும் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளனர்.

இதில் அமைச்சர் றிஸாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், வட மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த நிலையில், நிகழ்விற்கான அழைப்பு மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு மாவட்டச் செயலகத்தினால் விடுக்கப்படவில்லை.

மேலும், தற்போது மன்னார் மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் அழைக்கப்படுவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.