வீதியை புனரமைத்து தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

அம்பகமுவ பிரதேச செயலாளர் பகுதிக்குட்பட்ட போட்றி, எலிபடை, அயரபி தோட்ட மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

நோர்வூட் அயரபி சந்தியிலிருந்து எலிபடை தோட்டப்பகுதிக்கு செல்லும் சுமார் 5 கிலோ மீற்றர் பிரதான வீதி பல வருடகாலமாக குன்றும் குழியுமாக காணப்படுகிறது.

இந்த நிலையில், பிரதான வீதியின் ஊடாக பயணிக்கும் தோட்ட பிரிவை சேர்ந்த 1000 குடும்பங்களைச் சார்ந்த மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளதை சுட்டிக்காட்டி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டள்ளது.

இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஹட்டன், பொகவந்தலாவ பிரதான வீதியில், நோர்வூட் அயரபி சந்தியில் முன்னெடுக்கப்பட்ட நிலையில், நிரந்தர வீதியே எமது கோரிக்கை, தெற்கிற்கு அதிவேகம், எமக்கு ஆமை வேகம் போன்ற கோசங்களை ஆர்ப்பாட்டகாரர்கள் எழுப்பியிருந்தனர்.

பல வருடகாலமாக இந்த வீதியை சீர்திருத்தி தருமாறு இப்பகுதியை சேர்ந்த அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தும் ஒரு தீர்வினை பெற்றுத்தராத நிலையில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.